பள்ளி செல்லக்குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
நீடாமங்கலம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது;
நீடாமங்கலம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித்துறை சார்பில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் நேற்று தொடங்கி இந்த கணக்கெடுப்பு பணி மே மாதம் 31தேதி வரை நடைபெறுகிறது இந்த கணக்கெடுப்பு பணியில் 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகள் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத் திறன் உடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட உள்ளனர்.