கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கம்யூனிஸ்ட் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி;
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் பஹல்காம் என்ற பிரபல சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடியிருந்த இடத்தில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பானது. அதை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழு சார்பாக காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.