காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு திருவாரூரில் அஞ்சலி
திருவாரூரில் பாஜகவினர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி;
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 29 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்ந வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று இரவு அகல் விளக்கு (மோட்ச தீபம்) ஏற்றி கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவாரூர் பாஜக மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது மேலும் மாவட்ட செயலாளர் ரவி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் கழுகுசங்கர், மாநில பொதுச்குழு உறுப்பினர் அமுதாநாகேந்திரன், உள்ளிட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டு புஷ்பாஞ்சலி செலுத்தி நிகழ்வு நடைபெற்றது, மேலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களுக்கு அகல் விளக்கு (மோட்ச தீபம்) ஏற்றி அனைவரும் மலர் தூவி புஷ்பாஞ்சலி செய்தனர். இதில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ோர் கலந்து கொண்டனர்