ரயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெங்களூரிலிருந்து வந்த விரைவு ரயிலில் 18 கிலோ புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.;

Update: 2025-04-26 12:20 GMT
பெங்களூரு- நாகா்கோவில் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, பெங்களூருவிலிருந்து புறப்பட்ட விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு அதிகாலை வந்தது. அப்போது, அந்த ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது சில பைகளில் 18 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரித்தபோது, பைகள் யாருக்கு சொந்தமானது எனத் தெரியவில்லை. இதையடுத்து புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

Similar News