கபிலர்மலை வட்டாரத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம்.

கபிலர்மலை வட்டாரம் நெட்டையம்பாளையம் கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் 30-ந் தேதி நடக்கிறது.;

Update: 2025-04-26 13:48 GMT
பரமத்திவேலூர், ஏப்.26:    பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம் கொந்தளம் கிராமம் நெட்டையம்பாளையம் கிராமத்தில் பொன்காளி அம்மன் கேவில் திடல் அருகில் வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடமாடும் மண் பரிசோதனை முகாம் வாகனம் வர உள்ளது. ஆகையால் மண் பரிசோதனை செய்ய விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்ய உள்ள நிலத்தில் வி வடிவில் வெட்டி எடுத்து மண்ஈரம் இல்லாமல் நிழலில் உலர்த்தி தூள் செய்து துணிப்பையில் போட்டு எடுத்து வந்து கொடுக்க வேண்டும். இத்துடன் விவசாயின் பெயர், சர்வே எண், ஆதார் எண், செய்யப்போகும் பயிர், முன்பு பயிர் செய்த பயிர் போன்ற விபரங்கள் தேவைப்படும். பரிசோதனை சாதனை முடிவுகள் அன்று மாலை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்துடன் தண்ணீர் மாதிரியும் பரிசோதனைக்கு கொண்டு வரலாம். ஒரு மண் மற்றும் தண்ணீர் மாதிரிக்கு 30 ரூபாய் வேண்டும். கட்டணம் செலுத்த வேண்டும். மண், தண்ணீர் மாதிரிகள் முகாம் நடைபெறும் 30-ந் தேதி காலை 10 மணிக்குள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Similar News