பாண்டைமங்கலத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா.
பாண்டைமங்கலத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.;
பரமத்தி வேலூர்,ஏப்.26: பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அரசாயி அம்மன் கோவிலில் இன்று ராகு கேது பெயர்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. நவகிரக தெய்வங்களின் ஒன்றான ராகு கேது பெயர்ச்சி பஞ்சாங்கம் படி இன்று நடைபெற்றது. அரசாயி அம்மன் கோவிலில் பரிவார தெய்வங்களாக அமைந்துள்ள ராகு கேது சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து ராகு கேதுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியயை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.