மன்னார்குடியில் பாஜகவினர் சாலை மறியல்
மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாஜக இளைஞர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர் இதனை கண்டித்து மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கு வந்த மன்னார்குடி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர் தமிழக அரசை கண்டித்தும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.