தேனி மாவட்டம் அம்மாச்சியாபுரம் ஊராட்சி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னுார் செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட சாக்கடை ராஜவாய்க்காலில் பல ஆண்டுகளாக இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாக்கடையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.