தேனி அருகே பின்னத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி. ஏப்.21 அன்று இவரது வீட்டில் துாங்கியபோது வீட்டில் வைத்திருந்த அலைபேசி திருடு போனது. இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட ரோஷன் (21) என்பவரை நேற்று (ஏப்.26) கைது செய்தனர்.