கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஏப்.26) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கழிப்பறை பகுதியில் மாயாண்டி, முருகன் ஆகிய இருவர் சிறுவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.