ராமநாதபுரம் நாய்கள் தொல்லை கண்டுகொள்ளாத நிர்வாகம்
முதுகுளத்தூரில் தெரு வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயம்;
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள திடல் பள்ளிவாசலில் உள்ள கந்தூரி விழாவிற்கு சென்னையைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் தனது குடும்பத்தினரோடு கலந்து கொள்ள முதுகுளத்தூர் வந்திருந்தார். இன்று கந்தூரி விழாவிற்கு செல்லும்போது திடல் பள்ளிவாசல் அருகே அவரது (21 மாத) ஒன்றரை வயது குழந்தை அப்துல் வாஹித்-துடன் சென்று கொண்டிருக்கும்போது தெரு வெறிநாய் ஒன்று சிறுவனை முகத்தில் கடித்து குதறியது. உடனடியாக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அப்துல் வாஹித் கொண்டு செல்லப்பட்டு முகத்தில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதுகுளத்தூரில் தெருவில் திரியும் வெறி நாய்களால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.