ராமநாதபுரம் புள்ளிமான் உயிரிழப்பு

சாயல்குடி அருகே இரை தேடி வந்த மான் இரும்பு வேலியில் சிக்கி உயிர் இழப்பு;

Update: 2025-04-28 03:17 GMT
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. சாயல்குடி நரிப்பையூர் சாலையில் தண்ணீர் தேடி வந்த 5 வயது ஆண் புள்ளிமான் ஒன்று வாகனங்களை கண்டு மிரண்டு ஓடியதில் சாலையோர கம்பிவேலியில் மோதி பலத்த காயமடைந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு சாயல்குடி வனச்சரக காவலர்கள் சம்பவ இடத்துக்கு வரும்முன் அந்த புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. வனத்துறையினர் இறந்த மானை சாயல்குடி வனச்சரக அலுவலகத்தில் புதைத்தனர்.

Similar News