ராமநாதபுரம் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி பேச்சு போட்டி நடைபெற்றது
பி.கே.மூக்கையாத்தேவர் பிறந்த நாளை முன்னிட்டு, கமுதி தேவர் கல்லூரியில் நடைபெற்ற கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், நடைபெற்றற இந்தப் போட்டிகளுக்கு, சங்க நிர்வாகி முத்துராமலிங்கம், துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கச் செயலர் ஆறுமுகம், முன்னாள் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து, மூக்கையாத்தேவரின் வாழ்கை வரலாறு குறித்த கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கும், சமுதாயத் தலைவர் கானிக்கூர் கந்தசாமித்தேவருக்கும் மாணவர்கள் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்தனர்.முன்னாள் மாணவர் சங்கப் பொருளாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்