ராமநாதபுரம் திமுக புதிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-05-15 13:41 GMT
ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர், ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என தனித்தனியாக பொறுப்புகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இராமநாதபுரத்தில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். அப்போது வருகின்ற தேர்தலில் திமுகவின் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு செய்த என்னற்ற நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்கவேண்டும். மீண்டும் 2026ல் திமுக ஆட்சி வந்தவுடன் இளைஞர்களின் உழைப்பிற்கு ஏற்ற பதவி பெற முடியும் என்றார்.

Similar News