ராமநாதபுரம்அதிமுகவினர் துண்டு பிரச்சாரம் செய்தனர்

முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில் அதிமுகவின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரம் செய்தனர்;

Update: 2025-05-16 10:18 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள தனியார் மகாலில் அதிமுக முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழகம் சார்பில் பூத் கமிட்டி கலாய் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னர் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள சந்தைக்கடை ,பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும்,அதிமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ...தற்போது திமுக ஆட்சியில் நாள்தோறும் கஞ்சா, போதை பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாகவும், நாளுக்கு நாள் கொலை .கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்து வருவதால் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திய துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் சுதா கே பரமசிவன், முன்னாள் எம்எல்ஏக்கள் மலேசியா பாண்டி, டாக்டர் முத்தையா, மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.பின்னர் ஆசிமா மஹாலில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது .இதில் ஒவ்வொரு பூத் வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமையவும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆட்சியில் அமர அனைவரும் அயராது பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் , கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் வெங்கலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தேமுதிக நிர்வாகி ஆறுமுகம் என்பவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டி, கழக அமைப்புச் செயலாளர் சுதா.கே.பரமசிவன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Similar News