ராமநாதபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

கடலாடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் 16 மாட்டு வண்டிகள் பங்கேற்பு;

Update: 2025-05-16 10:19 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தனியங்கூட்டம் கிராமத்தில் உள்ள வனப்பேச்சியம்மன், கொண்டன அய்யனார் கோவில் வருடாபிசேகத்தை முன்னிட்டு இன்று காலை இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது பெரியமாடு வண்டி பந்தயத்தில் 7 மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 9 மாட்டு வண்டிகளும் என மொத்தம் 16 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்று ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றன. இந்த மாட்டு வண்டி போட்டியை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

Similar News