பரமத்தியில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம்.

பரமத்தி வேளாண்மை அலுவலகத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம். 31-ந் தேதி வரை நடக்கிறது.;

Update: 2025-05-16 14:06 GMT
பரமத்திவேலூர்,மே.16: பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய விவசாயிகள் 20-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பங்களை சரிசெய்யும் வகையில், பரமத்தி வட்டாரத்தில் இந்த மாதம் 31-ந் தேதி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் இதில் சேர்ந்துகொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் பயனாளி இறந்து விட்டால் அவரது ஆதார் எண் மற்றும் இறப்பு சான்றினை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து நிதியை நிறுத்தம் செய்ய வேண்டும். இறந்தவரின் வாரிசுதாரர்கள் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் தேவையான ஆவணங்களை பொது சேவை மையத்தில் சமர்ப்பித்து பதிவு செய்யலாம். இத்திட்டத்தில் தகுதியுடைய இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண், நில விவரம், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை பயன்படுத்தி பி.எம். கிசான் வலைதளத்தில் தாங்களாகவோ அல்லது பொது சேவை மையத்தை அணுகியோ பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News