ராமநாதபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திமுக எனும் தீய சக்தியை வீழ்த்துவதற்கு மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனர் முதுகுளத்தூரில் டிடிவி தினகரன் பேட்டி;
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள தனியார் மகாலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது டாஸ்மாக் முறைகேடுகளைமுதலமைச்சர் அதை தடுக்க நினைக்காமல் விசாரணைகளை அதற்கு பதில் சொல்ல தமிழ்நாடு அரசு தயாராக வேண்டும் என்றார். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரளா அரசு தடையாக உள்ளது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தொடர்பாக கேட்டபோது அதற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயனுடன் கைகோர்த்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். இரட்டை வேடம் என்பது திமுகவிற்கு கைவந்த கலை என்றார். மேலும் முல்லை பெரியார் அணைக்கு அம்மா பெற்றுத்தந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் கூட்டணி கட்சியான பினராயி விஜயனுடன் அடிக்கடி சந்தித்து பேசுகிறார் இதற்கான நல்ல முடிவை கொண்டிருக்க வேண்டும் . 2014ல் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக கூட்டணி வைத்தது போல 2026 ஆம் ஆண்டு திமுக எனும் தீய சக்தியை ஆட்சியில் இருந்த அகற்ற நாங்கள் கூட்டணியில் உள்ளோம் என்றார். உதயநிதியின் நெருங்கிய நண்பரான நிழல் போல் இருப்பவர் ரித்தீஷ் இவர் எந்த பதவியும் இல்லை டாஸ்மார்க் முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுகவின் முதல் குடும்பத்திற்கு மட்டுமே எல்லாமே . தமிழக மக்களுக்கு இல்லை என்றார். தேர்தல் வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றாமல் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி இதுவரை நடக்கவில்லை என தெரிவித்தார். இதற்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவு தெரியும் என பேசினார்.