கொண்டலாம்பட்டி அருகே சுற்றுலா பஸ் மோதி பரோட்டா மாஸ்டர் பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-05-20 03:21 GMT
திருச்சி மாவட்டம் வடமலைபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 60), புரோட்டா மாஸ்டர். இவர் சேலம் 5 ரோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று இவர் காலை கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த சுற்றுலா பஸ் எதிர்பாராத விதமாக பாலசுப்பிரமணியம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News