சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகம், வாத்வாணி அறக்கட்டளை

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து;

Update: 2025-05-20 03:23 GMT
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் நாகப்பன் வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் சுதிர் தலைமை தாங்கினார். வாத்வாணி அறக்கட்டளையின் நிர்வாக துணை தலைவர் ராஜீவ் வாரியர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு வாத்வாணி அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், இக்னைட் திட்டத்தின் நன்மைகளை பட்டியலிட்டார். வாத்வாணி அறக்கட்டளையின் கல்வி இயக்குனர் சுஜாதா, தொழில்முனைவோர் பாடநெறி எவ்வாறு வழங்கப்படுகிறது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பாடத்திட்டத்தால் எவ்வாறு பயனடைவார்கள் என்பதை விரிவாக விளக்கினார். வி.எம்.ஆர்.எப். (டி.யூ.)-ல் பாடத்திட்டத்தை மேற்கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தில் கையொப்பமிடப்பட்டு பகிரப்பட்டது. முடிவில் பல்கலைக்கழக இயக்குனர் ஞானசேகர் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 13 பல்கலைக்கழக அதிகாரிகள், 19 நிறுவன தலைவர்கள், 192 ஆசிரியர்கள் மற்றும் 714 மாணவர்கள் நேரில் மற்றும் ஆன்லைன் முறையில் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் 30 ஆசிரியர்கள் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மேம்பாட்டுத்திட்டம் சேலம் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் டாக்டர் சுஜாதா, நவேத் அகமது ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

Similar News