அட்மா திட்டத்தில் அறுவடைக்கு பின் சார்ந்த தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் பயிற்சி

அட்மா திட்டத்தில் அறுவடைக்கு பின் சார்ந்த தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடைபெற்றது.;

Update: 2025-05-20 13:09 GMT
அரியலூர், மே.20- அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாரம் வேளாண் விரிவாக்க மையம் வாலாஜாநகரத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய வேளாண்மை துணை இயக்குனர் கணேசன் விவசாயிகளிடம் மக்காச்சோளப் பயிரில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்கள் பற்றி கோடை உழவு செய்தல் வேப்பம் புண்ணாக்கு இடுதல் வரப்பு பயிர் மற்றும் ஊடு பயிர் செய்வதனால் உண்டாகும் நன்மைகள் பற்றி விரிவாக பேசினார். மேலும் பி எம் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வழிமுறைகள் மற்றும் அதில் உள்ள இடர்பாடுகளை நீக்கும் முறைகள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். முன்னிலை வகித்து பேசிய வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விவசாயிகளிடத்தில் பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மதிப்பு கூட்டு செய்து விற்பனை செய்வதன் உண்டாகும் நன்மைகள் மற்றும் கூடுதல் வருமானம் குறித்து விரிவாக பேசினார் மதிப்பு கூட்டு செய்யப்படும் பொருட்களில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விவசாய இடத்தில் பேசினார். துணை வேளாண்மை அலுவலர் ஆல்வின் நன்றி கூறினர். உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜகிரி லெனின் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Similar News