ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் நடைபெற்றது
கீழக்கரையில் நகர்மன்ற வளாகத்தில் மாதாந்திர நகராட்சி கூட்டம் நடைபெற்றது நடைபெற்ற;
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் செகனாஸ் ஆபிதா தலைமையில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையில் நடைபெற்றது இதில் ஆவேசமாக பேசிய ஒன்னாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது பாதுஷா திராவிட மாடல் ஆட்சியில் மேல் இருந்து கீழ் வரை அதிகாரிகள் யாரும் சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்தார் அவை தொடர்ந்து ஒண்ணாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய வார்டு பகுதியில் வாருகால் திட்டம் நிறைவேறாமல் உள்ளதாக கூறி நகராட்சி வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தங்களுடைய பகுதியில் வருகால் சரி செய்து தரவில்லை என்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புறக்கணிப்பதாக கூறினார்கள்