ராமநாதபுரம் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர். இராஜீவ்காந்தி அவர்களின் 34 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது;
இந்திய தேசத்தை 21 ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச்சென்ற கணினி நாயகன் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர். இராஜீவ்காந்தி அவர்களின் 34 வது நினைவு அனுசரிக்கப்பட்டது நகர் மத்திய கொடிக்கம்பம் அருகில் ராமநாதபுரம் நகர, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும், மாவட்ட பொருளாளரும், நகர்மன்ற உறுப்பினருமான இராஜாராம்பாண்டியன் கோபால் அவர்கள் தலைமையிலும், மாவடரட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மாநில செயலாளர் ஆனந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் மௌன அஞ்சலி,மலர் அஞ்சலி செலுத்தியும், கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றும் அனுசரிக்கப்பட்டது. இதில் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன், கோபால், நாகராஜன், கவுன்சிலர் மணிகண்டன், ஜெயக்குமார், அழகு, ராகுல் ஶ்ரீகாந்த், வலம்புரி முனியசாமி மேகநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.