சேலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வருகிற 27 ஆம் தேதி வரை;
சேலம் அரசு கலைக் கல்லூரியில் 1702 இளங்கலை முதலாம் ஆண்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் இது தொடர்பாக கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாக:- சேலம் குமாரசாமி பட்டியில் செயல்பட்டு வரும் பழமை வாய்ந்த அரசு கலைக் கல்லூரியில் 6,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் இளநிலை பிரிவில் 20 பாடப்பிரிவுகளும், முதுநிலை பிரிவில் 19 பாடப் பிரிவுகளும், முனைவர் பட்ட ஆய்வில் 13 பாடப்பிரிவுகளும் உள்ளன. முதலாமாண்டு இளநிலைப் பிரிவில் 1702 இடங்கள் உள்ளன. அனுபவமிக்க தகுதி வாய்ந்த பேராசிரியர் மூலம் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். மேலும் மாணவரின் வேலை வாய்ப்பிற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பு செயல்மிக்க திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்ட மூலமும், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது. சேலம் அரசு கலைக் கல்லூரியில் சேர www.tngasa.in என்ற இணையத்தளத்தில் வரும் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.