இரண்டு ஆடுகளை திருடி வந்த போது பைக்கு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால்

ஆடுகளை விட்டு தப்பி ஓடிய திருடர்கள்;

Update: 2025-05-21 13:00 GMT
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த தப்பகுட்டை கிராமம் சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவில் பைக் ஒன்று ரோட்டில் கவிழ்ந்தது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது இரண்டு பேர் இரண்டு ஆடுகளை பைக்கில் திருடி வந்தது தெரிய வந்தது. பொதுமக்களை கண்டவுடன் திருடர்கள் ஆடுகளை விட்டுவிட்டு பைக்கில் தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில் ஏகாம்பரம் வாத்தியார் காடு பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் இரண்டு ஆடுகள் நேற்று இரவு காணாமல் போன நிலையில் பல்வேறு இடங்களில் தேடிவந்துள்ளார். அப்போது ஆடுகளை சின்ன மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த தகவல் தெரிந்தவுடன் ராஜாமணி நேரில் வந்து பார்த்து தன்னுடைய ஆடுகள் தான் என தெரிவித்தார். பின்னர் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில் ஆய்வு செய்து தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். தப்பகுட்டை பகுதியில் அடிக்கடி ஆடு கோழிகள் திருடு போவதால் அதனை தடுக்க போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News