உடையார்பாளையத்தில் ராணுவ வீரர்களின் செந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம்
உடையார்பாளையத்தில் ராணுவ வீரர்களின் செந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.;
அரியலூர், மே.21- உடையார்பாளையத்தில் ராணுவ வீரர்களின் செந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற இந்திய சுற்றுலா பயணிகள் மீது நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் இதனையடுத்து மத்திய அரசு செந்தூர் ஆப்ரேஷன் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது இதில் இந்திய முப்படை ராணுவ வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தீவிரவாதிகளை அழித்தனர் இந்திய ராணுவ வீரர்களின் தன்னலமற்ற வீரத்தினை கொண்டாடும் வகையிலும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது உடையார்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பரமேஸ்வரிஆனந்தராஜ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் கைகளில் தேசிய கொடி ஏந்தி (திரங்கா யாத்திரா) துவங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது இதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஐயாரப்பன், நடராஜன் மாவட்ட பொதுச் செயலாளர் இளையராஜா, மாவட்ட பொருளாளர் சிவகுமார் காளிராஜ், சுப்பிரமணியம், மண்டல் தலைவர் பவன்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் என 200 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.