நேர்மையான செயலுக்கு பாராட்டு

மதுரை திடீர் நகர் பகுதியில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவரை காவல் ஆணையர் பாராட்டினார்.;

Update: 2025-05-22 01:14 GMT
மதுரை திடீர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பேருந்து நிலைய பாலத்தின் அருகில், சாலையில் கிடந்த ரூபாய் 3 இலட்சம் ரொக்க பணத்தினை சுருளிவேல் என்பவர் எடுத்து, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் முன்னிலையில் உரிய நபரிடம் நேற்று (மே.21) ஒப்படைத்துள்ளார். இவரது நேர்மையான செயலினை பாராட்டும் விதமாக மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.உடன் உதவி காவல் ஆணையர் கணேசன் இருந்தார்.

Similar News