ஆளுநரை வரவேற்ற ஆட்சியர்
சிவகங்கையில் ஆளுநரை பூங்கொத்து கொடுத்து ஆட்சியர் வரவேற்றார்;
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், இன்றையதினம் (22.05.2025) சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதை முன்னிட்டு, மாவட்டஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிங்கம்புணரி பகுதியில் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மற்றும் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்