வரன் தேடுபவர்களே உஷார் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
வரன் தேடுபவர்களே உஷார் திருமண இணையதளங்களில் ஆன்லைன் மோசடி கும்பல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை;
திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் ‘ஆன்லைன்’ மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இது தொடர்பாக புகார்கள் பதிவாகி உள்ளன. இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு பல போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் ‘சைபர் கிரைம்’ போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ‘சைபர் கிரைம்’ போலீசார் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் பெண்கள் இது போன்ற போலி இணையதளங்களை பயன்படுத்தி மோசடி செய்து வருவது கண்டறிப்பட்டுள்ளது.