முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2025-05-23 03:56 GMT
அரியலூர்,மே 23 - :மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி அரியலூரில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியனர் மலர் தூவி புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.செட்டி ஏரிக்கரையிலுள்ள காமராஜர் சிலை முன் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு அக்கட்சியின் வட்டாரத் தலைவர் ஆர்.கர்ணன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.பி.எஸ்.பழனிசாமி, ரவிச்சந்திரன், கலைச்செல்வன், மாவட்டச் பொதுச் செயலர்செந்தில்குமார், நகர துணைத் தலைவர் சுப்பிரமணியன் செயலர் சங்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி ராஜீவ்காந்தி குறித்து பேசினர்.

Similar News