விக்கிரமங்கலம் அருகே சாமி சிலைகள் பறிமுதல் செய்து டூவிலரில் கடத்தி வந்த மோட்டார் சைக்கிளையும் சிலைகளையும் போட்டுவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வளைவீச்சு

விக்கிரமங்கலம் அருகே சாமி சிலைகள் பறிமுதல் செய்து டூவிலரில் கடத்தி வந்த மோட்டார் சைக்கிளையும் சிலைகளையும் போட்டுவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி விசாரித்து வருகின்றனர்.;

Update: 2025-05-23 18:45 GMT
அரியலூர், மே.25- அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம் போலீசார் இரவு 10 மணி அளவில் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த 2 பேரை மறித்து சோதனை செய்ய முயற்சித்த போது நிற்காமல் மோட்டார் சைக்கிளை வேகமாக சென்றவர்களை போலீசார் துரத்தி சென்று பிடிக்க முயற்சித்த போது குணமங்கலம் பிரிவு சாலை அருகே உள்ள வாய்க்காலில் மோட்டார் சைக்கிள்களையும் அதில் கொண்டு வந்த சாக்கு முட்டையும் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் 4 உலோகங்களான சாமி சிலைகளும் 1 பீடமும் என மொத்தம் 5 பொருட்கள் இருந்துள்ளது. இதில் சுமார் 1 அடி உள்ள 2 சிலைகளும், முக்கால் அடியில் ஒரு சிலையும், அரை அடியில் ஒரு சிலையும், சிலை வைப்பதற்கான ஒரு பீடமும் இருந்ததை. போலீசார் கைப்பற்றி எந்தப் பெயர் உள்ள சாமி சிலைகள்,எந்த உலகத்தலானவை இதன் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவில்லை, மேலும் இதனை போட்டு சென்ற 2 மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருவதோடு, அது எந்தகோவிலில் இருந்த சாமி சிலைகள்,மேலும் எங்கிருந்து திருடப்பட்டது , எப்போது திருடப்பட்டது, போன்ற விவரங்களையும் போலீசார் தீவிரமாக சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News