ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு.
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை வருடாந்திர ஆய்வு செய்தனர்.;
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு செய்தனர். ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு வட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளின் பேருந்துகள் வருடாந்திர ஆய்வு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் மொத்தம் 222 பள்ளி பேருந்துகளில் எமர்ஜென்சி கதவு, மஞ்சள் கலர் பெயிண்ட், பேருந்து உள்ளே கண்காணிப்பு கேமரா, டிரைவர் கேபின், வேகக்கட்டுப்பாட்டு கருவி, காற்று ஒலிப்பான், முதலுதவி பெட்டி, பள்ளி பெயர் உள்ளிட்டவைகளை சரி பார்க்கப்பட்டது. இதில் ஆரணி கோட்டாட்சியர் (பொறுப்பு) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வதை பார்வையிட்டார். ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இதில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், போளூர் டிஎஸ்பி மனோகரன், மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் பூபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் கூறியது, இன்று முதல் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு துவக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ததில் 15 பேருந்துகள் ஒரு சில குறைபாடுகள் இருந்தன. அவற்றை மே 31க்குள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு எடுத்துவரவேண்டும். அப்போதுதான் ஆட்சேபனை இல்லா சான்று வழங்கப்படும் என்றும், வெள்ளிக்கிழமை முதல் மே 31 வரை தொடர்ந்து பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் என்றும்,கூறினார்.