சிறுகடம்பூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தேரை இழுத்து சாமி தரிசனம்

சிறுகடம்பூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2025-05-24 13:21 GMT
அரியலூர் மே.24- அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்திருவிழா நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறு கடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்லியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த திங்கள் கிழமை 12ந்தேதி ஐயனார் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 13ம்தேதி செல்லியம்மன் மாரியம்மனுக்கு காப்பு கட்டி தினசரி செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை மாலை இரண்டு வேளையும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவில் ஐந்தாம் நாள் தேர் விழாவும் ஏழாம் நாள் பூந்தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராமமக்கள் தேர்கட்டும் பணியில் ஈடுபட்டனர். சிறுகடம்பூர் கிராமமக்களே இணைந்து தேரின் அனைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு தேரினை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர் .அதன்படி தேர் கட்டுமானப் பணிகள் முடிந்த தேரை வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டது. விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி தங்களது நிலங்களில் விளைந்த முந்திரி ,மா, பலா ஆகியவற்றை கையிறுகளில் கோர்த்து தேரில் கட்டி தொங்கவிட்டனர். அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட செல்லியமனையும் மாரியம்மனையும் அருகருகே தேரில் ஏற்றி அமர்த்தினார்கள். அதன் பின்னர் காலை பத்து மணிக்கு தேர் பொது மக்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோயில் சன்னதியில் இருந்து தேரில் விநாயகர் முன்னே செல்ல புறப்பட்ட தேர் பிள்ளையார் கோயில் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக மாலை சந்நிதியை வந்தடைந்து. தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் சன்னதியை அடைந்ததும் ஆண்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சனமும், பெண்கள் நடை கும்பிடு போட்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். .

Similar News