சைதாப்பேட்டை ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் அம்மன் சிரசு ஊர்வலம்
ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா முன்னிட்டு அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.;
ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா முன்னிட்டு அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா முன்னிட்டு மே 16 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பின்னர் தினமும் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா சென்றது. மே 23 அம்மன் கரகம் வீதி உலா சென்றது. பின்னர் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலம் சென்றனர். பின்னர் பிற்பகலில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர், செங்குந்த மரபினர், இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.