ஆரணியில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு விழா.

ஆரணியில் தமிழக வெற்றிக்கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றதில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் திறந்து வைத்தார்.;

Update: 2025-05-26 18:53 GMT
ஆரணியில் தமிழக வெற்றிக்கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றதில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் திறந்து வைத்தார். ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றதில் தவெக மாவட்டசெயலாளர் சத்யா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்கி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நம்ம கட்சி தலைவர் விஜய்தான் போட்டியிடுகிறார் என நினைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசினார். மேலும் இதில் மாவட்டஇணைசெயலாளர் சத்தியராஜ், மாவட்டபொருளாளர் அசோக்குமார், மாவட்டதுணைசெயலாலர் கற்பகம், மாவட்டநெசவாளர் அணி அப்பு என்கிற ராஜதுரை, மாவட்ட விவசாய அணி ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News