கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.27) கம்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள தியேட்டர் அருகே கார்த்திக் என்பவர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்த அவரை கைது செய்தனர்.