அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (15). இவர் நேற்று (மே.27) குன்னூர் பகுதியில் உள்ள பள்ளியில் +1 வகுப்பு சேர்ந்து விட்டு அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் அருண்குமார் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்த நிலையில் விபத்து குறித்து கானா விளக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.