ஆபத்தான நிலையில் உள்ள நடைபாலத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
பழவனக்குடி கிராமத்தில் பழுதடைந்த நடைபாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருவாரூர் அருகே பழவனக்குடி கிராமத்திலிருந்து கிடாரம் கொண்டான் செல்வதற்கு ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பாலத்தின் ஒரு பகுதி பழுதடைந்துள்ளது பக்கவாட்டு கம்பிகளும் பலமிழந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் தூண்களும் உறுதித் தன்மை குறைந்துள்ளது இந்த நடைபாதத்தை நடந்து செல்பவர்களை விட இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த 4 கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வரும் நிலையில் வழுதடைந்துள்ள இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு புதிய பாலம் கட்டித்தர இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.