வாகனம் மோதி விவசாயி சாவு
காங்கேயம் அருகே வாகனம் மோதி விவசாயி பலி ஊதியூர் காவல் துறை விசாரணை;
காங்கேயம் அருகே காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 57). விவசாயம் செய்து வந்தார். இவர் மொபட்டில் கோவை சாலையில் சம்மந்தம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதி காளிமுத்து உயிரிழந்தார். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.