மீன்கள் வரத்து குறைவு: மீன்கள் விலை உயர்வு
தூத்துக்குடி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கடுமையாக உயர்வு சீலா மீன் கிலோ 1600 ரூபாய் வரையும் விளைமீன், ஊழி, பாறை ஆகியவை கிலோ 600 ரூபாய் வரையும் விற்பனையானது;
தூத்துக்குடி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கடுமையாக உயர்வு சீலா மீன் கிலோ 1600 ரூபாய் வரையும் விளைமீன், ஊழி, பாறை ஆகியவை கிலோ 600 ரூபாய் வரையும் விற்பனையானது மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் நாட்டு படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர் இன்று சனிக்கிழமை என்பதால் தினேஷ் புறம் நாட்டுப்புற மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பின ஆனால் கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது கோடை விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது இதன் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது சீலா மீன் கிலோ 1600 ரூபாய் வரையும் விளை மீன் ஊழி ,பாறை வகை மீன்கள் கிலோ 600 ரூபாய் முதல் 550 ரூபாய் வரையும் ஐலேஷ் கிலோ 500 ரூபாய் வரையும் கேரை மற்றும் சூரை வகை மீன்கள் கிலோ 350 ரூபாய் வரையும் சாலை மீன் ஒரு கூடை 2500 ரூபாய் வரையும் விற்பனையானது நண்டு கிலோ அறநூறு ரூபாய் வரை விற்பனையானது விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர் இதன் காரணமாக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்