ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரண்ட வந்த பொதுமக்கள்

வத்தலக்குண்டு அருகே தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து விடுவேன் என மிரட்டிய ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்ட வந்த பொதுமக்கள்;

Update: 2025-05-31 06:52 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் எழுவனம்பட்டி ஊராட்சியில் உள்ள கடம்பனூர் கிராமத்தில் 80 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பகுதிக்கு குடிநீர் திறந்து விடும் ஆப்ரேட்டர் ராமன் என்பவர் முறையாக தண்ணீர் திறந்து விட்டு விடுவதில் என கூறப்படுகிறது தண்ணீர் திறந்து விட கூறும் பொதுமக்களிடம் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார் இந்நிலையில் தன்னிடம் தகராறில் ஈடுபடும் பொதுமக்களிடம் தண்ணீரில் விஷம் கலந்து அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து ஆப்ரேட்டர் ராமன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திரண்டு வந்து புகார் மனு அளித்தனர் வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News