வடுகபட்டியிலிருந்து மேல்மங்கலம் செல்லும் ரோடு பழைய சினிமா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே இடதுபுறம் சில தினங்களாக சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் குழாய் உடைந்து குடிநீர், சாக்கடையில் வீணாக கலக்கிறது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. குடிநீர் வாரியம் உடனடியாக உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.