கூடலுார் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு பிப். 15இல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பஸ் ஸ்டாண்டிற்குள் தனியார் வாகனங்கள் அதிகளவில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. தனியார் வாகனங்கள் அதிகளவில் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வருவதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.