கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள ஏலத்தோட்டங்கள் மற்றும் வயல்களில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நில உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குமுளி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.