தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, முல்லை பெரியாற்றில் தற்பொழுது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் சிலர் அதனை பொருட்படுத்தாமல், முல்லைப் பெரியாற்றின் கரையில் செல்பி எடுத்து வருகின்றனர்.