போடி தாலுகா காவல் நிலைய போலீசார் சில்லமரத்துப்பட்டி பகுதியில் நேற்று (மே 31) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே இரு குழுக்களாக ஆறு பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்