ஜெயமங்கலம் காவல் நிலைய போலீசார் நேற்று (மே 31) குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது மருகால்பட்டி சுடுகாடு அருகே கணேசன், சுப்பிரமணி ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்