ஜெயமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் நேற்று (மே 31) எருமலைநாயக்கன்பட்டியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சட்ட விரோதமாக சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. அங்கு சென்ற காவல்துறையினர் மணல் திருட்டில் ஈடுபட்ட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட ஜேசிபியையும் பறிமுதல் செய்தனர்.