ஜெயமங்களம் காவல் நிலைய காவல்துறையினர் நேற்று (மே 31) குள்ளபுரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த நான்கு டிராக்டர்களில் அரசின் அனுமதி இன்றி கனிமவளப் பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதில் ஒரு டிரைவர் தப்பிய நிலையில் மற்ற மூன்று டிரைவர்களை கைது செய்த காவல்துறையினர் கனிம வளக் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.