முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு ஏற்பு
பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) செல்வக்குமார் முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.;
பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு ஏற்பு பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய முருகம்மாள் வயது முதிர்வின் காரணமாக பணி நிறைவு பெற்றார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) செல்வக்குமார் முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் நேர்முக உதவியாளர் சுரேஷ், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.